ID CARD(SERIES-1)

 Disclaimer:

          இக்கதையில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே!..


 எங்கள் காலெஜில் இப்படி ஒரு சம்பவம் நடக்க சாத்தியமில்லை.

(ஆதலால் இந்த கதையை ‌படித்து விட்டு என்னுடன் படிக்கும் சக கல்லூரி மாணவர்கள் கோபபட‌ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.)

கதை பற்றி:

        இக்கதையை 19 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தன் வாழ்வில் ஓர் நாளில் நிகழ்ந்தவற்றை தொகுப்பாய் அவன் கூறுவது போல எழுதப்பட்டிருக்கும்.இனி கதை தொடரும்!..

6:05(Morning)

        என்றும் ‌போல் இல்லாமல் அன்று மகிழ்ச்சியோடு எழுந்தேன்!
       ஏனென்றால் அன்று ‌எங்கள் காலெஜில் College day function என்பதால் மட்டுமல்ல அன்னைக்கு எங்களுக்கு Full day OD என்பதாலும் தான். வழக்கமான நேரமான 8:20-க்கு Bus stop-ற்கு சென்றேன்.என்றும் இல்லாத சந்தோஷம் அன்று என் மனதில் இருந்தது.

8:31(Morning)-Bus stop

          Bus stop-ல்‌ இருந்த என் நண்பர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் Out bus-ல் செல்வோம் என்று என்னிடம் கேட்டார்கள்.நானும் ஒரு மனதாக சம்மதித்து Bus-ல் ஏறினேன்.
         முதலில் Bus-ல் கூட்டம் குறைவாக இருந்தபொழுதே உட்கார இடமில்லை!.. ஒவ்வொரு ‌Stop-ல் நிற்கும் போதும் மூச்சு திணறும் அளவிற்கு கூட்டம் அலை மோதியது.என் Bag-யை Bus-ல் உட்கார்ந்திருந்த என் நண்பன் ஒருவனிடம் கொடுத்து விட்டு கொஞ்சம் ‌Freeya நின்று கொண்டு சென்றேன்.ஆனால் மற்ற மாணவர்கள் அனைவரும் தொங்கி கொண்டு வரும் அளவிற்கு கூட்டம் இருந்தது.
          கல்லூரியை நெருங்க நெருங்க எதையோ மறந்தது போன்று எனக்கு தோன்றியது!
          சட்டென, ID CARD-யை மறந்து விட்டேனோ! என‌ நினைத்து என் Bag-யை தேடினேன்.என்னுடைய Bag-யை வைத்திருந்தவனிடம் அந்த கூட்டத்தில் தத்தி முத்தி சென்றேன்.
         அவன் Bus-ன் முன்னே ஐன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருந்தான்.அவனிடம் Bag-யை வாங்கி ID CARD-யை தேடும் அந்த பரபரப்பான நேரத்தில் ‌கூட என் கண்கள் என்னையே அறியாமல் ஐன்னலை நோக்கி சென்றது.
        என் கைகள் ID CARD-யை தேடினாலும்,என் கண்களோ அவளின் முகத்தையே தேடியது.
         அந்த ஜன்னலின் இரண்டு கம்பிகள் வழியே என் கண்கள் கண்டவை!
          தலை திருப்புவதற்கு ஏற்றாற்போல் ஆடும் ஜிமிக்கிகள்.வெள்ளை நிற பட்டு புடவையில் தங்க நிறம் சேர்த்தார் போல் இருக்கும் அவளை ஏன் பார்கிறேன் என்று தெரியாமல் பார்த்து கொண்டு இருந்தேன்.!🥰🥰
           ஒருவழியாக என் ID CARD கிடைத்துவிட்டது.அவள் முகத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை!..🥺🥺
          கையில் ID CARD-யை எடுத்து கொண்டு அவளை பார்க்கும் ஆர்வத்தோடு கீழே இறங்கினேன்.அன்று எனக்கு அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் மாறி மாறி நடந்தது.

9:04(Morning)- College Gate

          அவளை பார்க்கும் அவசரத்தில் ஒவ்வொருவராய் தள்ளி விட்டு கீழே இறங்கினேன். அவளை எங்கே என்று தேடிய கண்கள் திரும்பிய போது சட்டென்று ஒரு மோதல்!..🤯🤯
          எனது அதிர்ஷ்டத்தால் அவள்‌ மீதே நான் மோதினேன்.ஆனால் எனது துரதிர்ஷ்டத்தால் அவளின் முகத்தை என்னால் பார்க்க ‌முடியவில்லை.

(அது கொரானா கால கட்டம் என்பதால் அவள் முகம் மாஸ்கால் மறைக்கப்பட்டு இருந்தது)
        
          ஆனால் அவள்‌ பதட்டத்தில் இருந்ததை அவள் கண்களின் வழி அறிய முடிந்தது.நான் கண் சிமிட்டும் நேரத்தில்,அவள் வாசனை மட்டுமே என்னிடம் இருந்தது, அவள் சென்று விட்டாள்.அப்பொழுது அங்கு ‌நடந்தவற்றை நினைவிற்கு கொண்டு வந்த பொழுது எனக்கு தெரிந்தது ஒன்று தான்!...

        அவளுடைய ID CARD என்னிடத்தில்!..
        என்னுடைய ID CARD அவளிடத்தில்!..
          
                                                           -தொடரும்..


Comments

Popular posts from this blog

Email finder Tools and Resources

HAIR LOSS

நினைவில் அவள்!