நினைவில் அவள்!

நேத்து என்ன நடந்துச்சுனு தெரியாதவங்க( ஏழு நாட்களின் நினைவு)ங்கர இந்த கதையோட முதல் பகுதிய பாத்துட்டு வாங்க!

என்னை பற்றி;

          நான் இந்த கதையில இருக்கிற சம்பவங்கள் நடக்கும் போது 11th படிச்சுட்டு இருந்தேன். அப்ப நான் ரொம்ப shy type அதுனால 12th முடிக்கிற வரை நம்ம வயசுல இருக்கிற எந்த பொண்ணுடையும் பேசுனது கிடையாது!
10th வர எப்படியோ நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி, 11th ல (bio-maths) குருப் எடுத்து தினம் தினம் வாழ்வா!சாவா! னு போராடிட்டு இருந்த சமயத்தில நடந்த சுவராசியங்கள் தான் இந்த கதை. வாங்க கதைகுள்ள போவோம்,



8/8/2018(LUNCH BREAK);
        வீட்ல போய் எடுத்த மார்க எப்படி சொல்றதுன்னு தெரியாம,பயத்துல சாப்பிட்டுட்டு இருந்தேன். அப்ப நம்ம Last Bench students(Deepak, Manoj,C.Arun,Mano bala,Rajesh, Prathyush,Gowtham) சாப்பிட்டு மீச்சம் இருந்த காய்கறி எல்லாம் ஒருத்தர் மேல ஒருத்தர் தூக்கி எறிந்து ஜாலியா Fun-பண்ணிட்டு இருந்தாங்க. நானும் உள்ள இருக்க பயத்த வெளிய காட்டாம சிரிச்சிட்டு ஜாலியா தான் இருந்தேன்.

(5th period)

        கிளாஸ் ஆரம்பிச்சுருச்சு! இங்கிலிஷ் கிளாஸ் (Mulam sir- class teacher). எங்கள பொறுத்த வரைக்கும் இங்கிலிஷ் கிளாஸ்னாலே ஓபி தான்! அந்த கிளாஸ் தான் எல்லாரும் ஜாலியா பேசிட்டு இருப்போம். அப்ப ஒரு அனொன்ஸ்மன்ட்!! (Circular)வந்துச்சு அது என்னனா!(11 th bio-maths students ஒரு பெரிய இன்ஜினியரிங் காலேஜ் க்கு கேம்பஸ் விசிட்டிங்கு போரீங்கனு).இந்ந காலெஜ பத்தி பின்னாடி வர போகிற கதையில சொல்றேன்.
கேம்பஸ் விசிட்டிங்கு னா என்னனு தெரியாமையே பசங்க எல்லோரும் ஜாலியா ஆயிட்டோம்.
          அப்போ H.M sir வர்ரத ஜன்னல்  வழியா பாத்துட்டு எல்லாரையும் அமைதியா இருக்க சொன்னாரு எங்க கிளாஸ் சாரு. H.M வந்து எப்பவும் போல  எப்ப வரனும்,என்னலாம் கொண்டு வரனும், கொண்டு வரக்கூடாதுனு சொல்லிட்டு இருந்தாரு.நாங்களும் எல்லாத்துக்கும் தலைய,தலைய ஆடிட்டு மறுபடியும் பேச ஆரம்பிச்சுடோம்.
          அன்னைக்கு முழுக்க இத பத்தி பேசிய பொழுது போயிருச்சு.

9/8/2018(காலை)

           காலைல எழுந்துருச்சு ஜன்னல் வழியா வெளிய பாத்தேன். லேசான தூறல் பெஞ்சது,உடனே நியுஸ் வச்சு பார்த்தேன்.நம்ம மாவட்டம் பெயர் விடுமுறை லிஸ்ட்ல வரல !
           சரின்னு வேகவேகமா கிளம்பிட்டேன்.அப்பனு பார்த்து ஒரு குறல்!
"பரீட்சை பேப்பர் தந்துடாங்களான்னு"
எங்க அம்மா கேட்டதும் , உள்ள இருந்த மரண பீதிய  மனசுக்குள்ள வச்சுட்டு ,வெளிய குழந்தை மாதிரி முஞ்ச வச்சுட்டு"கொடுத்துட்டு வாங்கிடாங்கமானு" பொய் சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
  அப்புறம் பேக்க எடுக்கும் போது தான் ஞாபகம் வந்தது!
  " H.M ஒரு நோட்டு மட்டும் கொண்டு வந்தா போதும்னு சொன்னாரு"
        சரி நோட்ட அடுத்தவன் பேக்ல வச்சுகலாம்னு கிளம்பி, பஸ் நிக்குற இடத்துகிட்ட பசங்க எல்லாம் வந்துட்டு நின்னு பேசிட்டு இருக்கும் போது தான்,
  அவள பார்த்தேன்!.....

                                           -தொடரும்...


இந்த கதைக்கு நீங்கள் தருகிற ஆதரவை பொறுத்துதான் அடுத்த பகுதியை பதிவிடுவேன். அதனால் முடிந்த வரை கதை படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த கதையை பகிரவும்.(adventuredria.blogspot.com)

QUESTIONS TO ALL;
    1) யார் யாரெல்லாம் தூறல் பெஞ்சுதுக்கு எல்லாம் ஸ்கூலுக்கு லீவ் விடலையேனு FEEL பண்ணது.
   2)யார் யாரெல்லாம் ஒரு நோட் கொண்டு போனப்ப எல்லாம் மத்தவங்க பேக்ல நோட்ட வச்சது.
   மேல சொன்ன விஷயத்த செஞ்சவங்க எல்லாம் கீழ கமண்ட்  பண்ணுங்க.

Comments

  1. I'm Aravindh Na...
    Manobala Frnd&thambi

    1) Naanum leave vidalenu feel panniruken...
    2)namma 1st bench students back la note ah vachiruvom Na

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Email finder Tools and Resources

HAIR LOSS