HAIR LOSS


 18/04/2022-9:00Am

     கண்ணாடியில் தனது பின்பத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.அவனது 6 அடி உயரம் அந்த 5அடி நிலைக் கண்ணாடியில் தெரியாததால், சற்று குனிந்தான்.அவ்வாறு குனிந்த பொழுது அவனது தலை முடி அவனது கண்ணோடு உரசியது.அந்த அழகை அவனே ரசித்தாவாறு தலை முடியினை கோதி விட்டுக் கொண்டான்.அவன் முடி மீது அவனுக்கு தனி கர்வம் உண்டு.

அவனோடு கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் அனைவரும் ஒரு முறையாவது அவனது முடியைப் பற்றி புகழ்ந்து இருப்பார்கள்.

இது நாளடைவில் கர்வமாக மாறிவிட்டது.

12:30 pm

 கல்லூரியில் lunch break-ல் அவனது close friend ராஜேஷ் தனக்கு கடந்த ஒரு மாதமாக முடி அதிகமாக கொட்டுவதாக கூறி!..தனது முடியை இழுத்து அது கையோடு வருவதைக் காண்பித்து வருத்தட்டான்...

இதை பார்த்த அர்ஜுன் விழுந்து.. விழுந்து சிரித்து விட்டு.. இன்னும் கொஞ்ச நாள் ல உனக்கு சொட்ட விழுந்துரும்..என்று சொல்லி. அன்று முழுவதும் ராஜேஷை சக மாணவர்கள் முன்னாள் சொட்ட...சொட்ட ...என்று கூப்பிட ஆரம்பித்தான்

இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தான்.. இரண்டு நாட்கள் ராஜேஷ் கல்லூரிக்கு வரவில்லை என சக மாணவர்கள் அர்ஜுனிடம்‌ கூறினர்.

20/04/2022-9:00pm

தனது நண்பனை காய படுத்தியதை உணர்ந்த அர்ஜுன் அவனிடம் மன்னிப்பு கேட்க எண்ணினான்.நாளை எழுந்த உடன் அவனை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டு முகத்தை கழுவ bathroom-குள் சென்றான் .

அவன் முகத்தை கழுவி கொண்டிருக்கும் வேளையில்,அவனது தலை மேல் பூச்சி நுழைந்தது,அவன் முகத்தில் சோப்பு இருந்ததால் அவனால் அதனை சரியாக பார்க்க முடியவில்லை.எனவே தோராயமாக அதனை தலையில் இருந்து பிடித்து இழுத்தான்.அதனை பிடித்து விட்ட மகிழ்ச்சியில் முகத்தை கழுவி விட்டு பார்த்த அவனது கண்கள் கலங்க ஆரம்பித்தது.அவனது முடி கொத்தாக கையில் இருந்தது.அவனது மனநிலை பாதிக்கப்பட்டது.அவனது காதிற்குள் யாரோ!.. செய்யும் தவறுக்கு தண்டனை உண்டு... என்று கூறுவது கேட்டுக் கொண்டே இருக்கிறது.

இதனை நம்ப இயலாதவனாய் மீண்டும் தலைமுடியை இழுத்தான்.மறுபடியும் கொத்தாக முடி விழுந்தது.அவன் நொருங்கினான். அவனால் தனது பெருமை அழிவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.கதறி அழத் தொடங்கினான்.

இனி அவனது வாழ்க்கையில் சந்தோஷம் என ஒன்று இல்லாததுப் போல மொட்டை மாடியில் கண்ணீர் சிந்திய கண்களுடன் அமர்ந்திருந்தான்.அவனது நினைவுகள் எல்லாம் தனது நண்பனை காய படுத்தியதை பற்றியும்,இனி அதே விஷயம் தனக்கும் நடக்கும் என்பதை பற்றியுமே இருந்தது.அவனது‌ மனதிற்குள் அவன் நண்பனை கேளி செய்த விஷயங்கள் அனைத்தும் அவனுக்கு நடப்பது போன்று நினைத்து மனதிற்குள் கதறிக் கொண்டிருந்தான்.ராஜேஷின் நிலை அவனுக்கு முழுதாக புரிந்தது.அவனிடம் மன்னிப்பு கேட்க போன் செய்தான்.அப்பொழுது அவன் போனில் கேட்ட குரல் !...செய்யும் தவறுக்கு தண்டனை உண்டு ....என்று கூறியது.

இதனை கேட்டவுடன் திடுக்கிட்டு முழித்தான்.

12:00Am

அருகில் இருந்த அவனது போன்‌ சத்தம் அவனை எழுப்பியது.போனில் ராஜேஷ்!.. இரண்டு நாட்கள் Relative function-க்கு சென்றுவிட்டதால் Assignment அனுப்ப சொல்லி கால் செய்ததாக கூறினான்.அதனை கேட்டவுடன் மகிழ்ச்சி கலந்த மிரட்சியில்,அவனை அறியாமல் அவனது கைகள் தலையைக் கோதின.அப்பொழுது இதுவரை நடந்தவற்றில் இருந்து மீள முடியாத அவன்!..அவன் கையை பார்க்கும் பொழுது கையில் இருந்தது ஒரு முடி.....

             ‌‌‌‌‌‌‌                                                      -😍

Comments

Popular posts from this blog

Email finder Tools and Resources

நினைவில் அவள்!