கல்லூரி பயணம்

 முந்தைய இரண்டு நாட்களில் நடந்த விஷயங்கள் தெரியாதவங்க (ஏழு நாட்களின் நினைவு, நினைவில் அவள்!)என்ற இந்த கதையோட முதல் இரண்டு பகுதிய பாத்துட்டு வாங்க!


அவளை பற்றி:

அவளும் நானும் சின்ன வயசுல இருந்து ஒரே area-ல, பிரண்ட்ஸா தான் இருந்தோம்.ஆனால் குறிப்பிட்ட வயசுக்கு மேல எனக்கு அவள் மீது ஈர்ப்பு வந்துச்சு, அது நாளைடைவில் ONE SIDE LOVE-அ 
மாறிறுச்சு. அதுனால அவள்கிட்ட பேசுறத குறைச்சு கிட்டேன்.அவளும் என்ன யாருனே தெரியாத மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சட்டாள்.

ஆனால், நான் தினம் காலைல அவளுக்காக wait பண்ணி அவள் ஸ்கூலுக்கு போகும் போது அவளுக்கு பின்னாடி அவளுக்கே தெரியாம போவேன் "அது ஒரு தனி Feel". வாங்க கதைகுள்ள போவோம்!

9/8/2018(8:00 A.M- BUS STOP)

       எனக்கு மனசுக்குள்ள ஒரு ஆசை , அவளும் கேம்பஸ் விசிட் வந்தா எப்படி இருக்கும்னு.ஆனால் அது நடக்காதுனு மனசுல நினைச்சுட்டு பசங்க கிட்ட காலெஜ பத்தி பேசிட்டு இருந்தேன். பசங்க எல்லாம் தெரிஞ்ச அண்ணா, அக்கா லாம் அங்க படிக்கிறதா சொல்லிட்டு இருந்தாங்க! அந்நேரம் பஸ் வந்துச்சு, ஆனால் இரண்டு பஸ் வந்துச்சு!

       எங்களுக்கு ஒரு பஸ்ஸே அதிகம் எதுக்கு இரண்டு பஸ்னு?( யோசிச்சுட்டு இருந்த போ), அவள் படிக்கிற ஸ்கூலருந்து பசங்க, பொண்ணுங்கலாம் வந்துருந்தாங்க. எனக்கு மனசுக்குள்ள இனம்புரியாத பயம் கலந்த சந்தோஷம் என்னா!

     எங்களுக்கு Incharge-அ வந்த(G.M Sir) எங்கள நிக்க விடாம பஸ்ல ஏற சொல்லிட்டாரு. நாங்களும் எதுக்கு பொண்ணுங்க முன்னாடி திட்டு வாங்கி அசிங்க படனும்னு பஸ்ல ஏறிட்டோம்.

     அடுத்து ஒரு பிரச்சனை, எல்லா ஜன்னல் சீட்லையும்  இடத்தைப் பிடிச்சுடாங்க.கடைசியா டிரைவர் பின்னாடி இருந்த சீட்ல மட்டும் தான் ஜன்னல் சீட் Free-அ இருந்துச்சு.அங்க உட்கார போகும் போது என் பிரண்ட் கூப்டான் அவன் கிட்ட உட்கார வர சொல்லி.ஆனால் நான் அவன் பேச்சை கேட்காம ஜன்னல் சீட் தான் முக்கியம்னு போய் உட்கார்ந்தேன்.எனக்கு இருந்த நேரமானு தெரியல,என் பக்கத்தில Incharge வந்து உட்கார்ந்துடாரு. அப்புறம் தான் ஒரு நல்ல விஷயம் நடந்துச்சு!

அந்த பஸ்ல இடம் இல்லனு சொல்லி,அந்த ஸ்கூல் பொண்ணுங்க பாதி பேர் எங்க பஸ்ல ஏறுனாங்க. அதுனால எங்கள பின்னாடி போக சொன்னங்க. 

      நா வேகமா போய லாஸ்ட்ல இருந்த ஜன்னல் சீட்ல உட்கார்ந்துட்டேன்.அந்த ஸ்கூல் பொண்ணுங்க வரிசையா ஏறும் போது பார்த்தேன்.அவள் ஏரல,சரி அவள் வரலேனு முடிவு பண்ணிட்டேன்.  



      பஸ் கிளம்பிருச்சு,இங்க இருந்து காலெஜ் போக 20-நிமிஷம் ஆகும்னு பசங்க சொன்னாங்க! நான் அவள் ஏன் வரலேனு நினைச்சிட்டே ஜன்னல் வழியா வெளிய பாத்துட்டு வந்தேன். அப்பதான் மழை பெஞ்சு இருந்ததால, மண்வாசனையோட காத்து நம்ம முகத்த தொட்டு போகும் போது,"அந்த  feel செமையா இருந்துச்சு".

After 30 minutes:

    ‌பஸ் எப்படியோ தத்தி முத்தி காலெஜ் கேம்பஸ் வரைக்கும் வந்துருச்சு. பஸ் உள்ள போக போக காலெஜ் முழுக்க இருக்க மரங்கள் எல்லாம் காலெஜ் Bulidings-அ மறைக்குற அளவுக்கு பெருசா வளந்து இருக்கிறத பாக்க முடிஞ்சது.அந்த மரத்து கீழ பசங்க, பொண்ணுங்க எல்லாம் உட்கார்ந்துருந்தாங்க,காலெஜ்குள்ள தார் ரோடு பலபலனு இருந்துச்சு.அந்ந ரோட்டில இருக்கிற குப்பைய எடுக்குற மெஷின் லா அங்க தான் பார்த்தேன்.இதெல்லாம் எனக்கு புது விஷயமா இருந்துச்சு.இந்ந விஷயங்கள் எல்லாம் காலெஜ் பற்றிய என்னோட கண்ணோட்டத மாத்துச்சு.

     இருந்தாலும் எனக்கு பின்னாடி வந்த பஸ்ல அவள் இருப்பானு ஒரு நம்பிக்கை! அதுனால பஸ்ஸ விட்டு இறங்கினதும் அந்த பஸ்‌ வரும்வரை நின்னுட்டு இருந்தேன்.ஆனால் எங்கள உடனே ‌"Meeting Hall" போக சொல்லிட்டாங்க . நானும் கிளம்பி போய்டேன். Meeting hall முழுக்க Full A/C . எனக்கு குளிர்ள உடம்பு நடுங்க ஆரம்பிச்சுருச்சு "எதுக்குடா இங்க வந்தோம்"னு நினைச்சுட்டு இருந்தபோ! 

அங்க எதுக்காக  வந்துருகேனு தெரிஞ்சுருச்சு,"அவள பாத்துட்டேன்". இதுக்கு மேல எனக்கு குளிர்ள, பதட்டதுல வேர்க ஆரம்பிச்சுருச்சு! 

      என் கனவு நினவான பிரம்மிப்புல அவள பாத்துட்டு இருந்தேன். அவள நான் பாக்கிறத என் பிரண்ட் கண்டுபிடிச்சுட்டான்!!!

                                              -தொடரும்

Questions to All:
     யார் யாருகெல்லாம் பஸ்ல ஜன்னல் சீட்ல உட்கார பிடிக்கும்!
 
 மேல இருக்க விஷயம் பிடிச்சவங்க கீழ கமண்ட் பண்ணுங்க (with Name)
And support and Share My blog to all (adventuredria.blogspot.com)
‌‌
                            "இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்"

Comments

Popular posts from this blog

Email finder Tools and Resources

HAIR LOSS

நினைவில் அவள்!