Message To Love Failure Boy


(இக்கதையில் வரும் சம்பவங்கள் வேவேறு காலக் கட்டத்தில் நிகழ்ந்தவை.அதனால் கதைகள் மேல் தேதியையும் ஆண்டையும் சரியாக பார்த்து விட்டு கதைக்குள் செல்லவும்)



13/2/2021.
11:30P.M(Night)

                    அனைத்து விளக்குகளும் அணைக்கபட்டிருந்த ஒரு அறையில், சிறிய டேபிள் லைட்டின் வெளிச்சத்தில், வாழ்க்கையில் வெற்றியை நோக்கி செல்ல துடிக்கும் ஒரு இளைஞனாக, இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகும் எனது UPSC-Main தேர்விற்காக தயாராகி கொண்டிருந்தேன்.
         ‌‌என் ரூமை சுற்றி எங்கு பார்த்தாலும் புத்தகங்கள், ஒரு மாதமாக நான் புத்தகங்களை தவிர வேறு எதுவும் பார்க்கவில்லை என்பதை என் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் எனக்கு உணர்த்தியது.
         சற்று ஓய்வெடுக்க டேபிளில் சாய்ந்த அந்த கன நேரத்தில் என் Mobile-க்கு வந்த அந்த Message, என் வாழ்க்கையை ஒரு வருடம் பின்னே தள்ளி போட்டது!
          என் முதல் தோல்வியான காதல் தோல்வியின் நினைவுகள் என்னை சூழ்ந்தது.அதன்பிறகு என்னால் படிக்க முடியாததால்,என் bed-ல் வந்து படுத்தேன்.என் கண்களை மூடினாலும் அன்று நடைந்தவையே நினைவிற்கு வருகிறது.ஒரு வருடம் பின்னோக்கி என் மனம் ஓடியது...

12/2/2020
8:00 P.M(Night)

         ஒரு வாரமா INSTAGRAM-ல யார் யாரோ கையில கால்ல விழுந்து அவள் ID-ய கண்டுபிடிச்சு இன்னைக்கு எப்படியாவது Love-அ சொல்லிரனும் Request பண்ணா No Response!!..
        கடைசியா நா உன்னொட சின்ன வயசு Friend தான்னு சொன்ன பிறகும் ஒரு Response um இல்ல. சரி எல்லாம் முடிஞ்சுனு, அன்னைக்கு போய் தூங்கிட்டேன்.

13/2/2021
11:46 P.M(Night)

          என் நினைவுகளிருந்து வெளி வரும் விதமாக அவள் அனுப்பிய இன்னோரு Message-ன் ஒலி எனக்கு ஒலித்தது.ஆனால் என்னால் அந்த நினைவுகளை விட்டு ‌வெளிவர முடியல!..

13/2/2020
6:02 A.M(Morning)

          எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாத எனக்கு அன்று ஒரு அதிர்ச்சி!..
          என் Request அவளால் ஏற்று கொள்ள பட்டிருந்தது.ஆனால் எனக்கு என்ன message பண்றதுனே தெரியல.
          ஒரு பெரிய மனபோரட்டத்திற்கு பிறகு messenger button அழுத்தி!..
           என்‌ மனசுல இருந்தத Message பண்ணி அனுப்பினேன்.
          நான் அனுப்பிய ஓரிரு நிமிடங்களில் என் Message அவளால் பார்க்க பட்டுச்சு.

13/2/2020
8:00 P.M(Night)

          காலைல இருந்து wait பண்ணியும் ஒரு Replyயும் வரல?..
           அதனால ஒரு சின்ன வெறுப்பல
"பிடிக்கலனா சொல்லிரு"னு Message போட்ட ஓரிரு நொடிகளில் அவளிடமிருந்து Return Messages வந்தது
அதுவே என் வாழ்க்கையை திருப்பி போட காரணமாக அமைந்தது, ஆனால் அந்த Message எனக்கு ‌மிகவும் வலியை தந்தது,அவை
               "Sorry bro,
                I am not interested"
             அந்த விஷயத்தில் இருந்து வெளி வருவதற்கு வேறு ‌வழி தெரியாமல் இருந்த நான் வேறு வழியில்லாமல் படிக்க ஆரம்பித்தேன். என் காதலை நாட்டின் மீது வைத்து IAS OFFICER ஆக வேண்டும் என்று நினைத்தது முதல், இப்போது அதன் கடைசி கட்டத்தில் இருப்பது வரை எனது ஒரு வருட காலத்தில் நிகழ்ந்த அனைத்தும் நினைவிற்கு வந்தது.

14/2/2021
12:00A.M(Night)

        சட்டேன எழுந்து டேபிளில் வைத்து இருந்த எனது Mobile-ஐ எடுத்து அவள் அனுப்பிய Message-யை படித்தேன்.அதில்
              " I love you
               I miss you" என்று இருந்த அந்த Message-யை படித்து விட்டு சிறிது புன்னகையோடு BLOCK option-யை press பண்ணிட்டேன்...
         அப்போது டேபிளுக்கு மேலே இருந்த காலண்டரை கிழித்த பொழுது அதில் எழுதபட்டிருந்தது "உலக காதலர் தினம்".
              
 
(மேலும் இது போன்ற கதைகளை படிக்க இந்த blog-யை Subscribe மற்றும் Share செய்யவும்)

Comments

Popular posts from this blog

Email finder Tools and Resources

HAIR LOSS

நினைவில் அவள்!